search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர்"

    5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மரை முப்பதாறு சுவாதி நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
    ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.
    சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர்.

    பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது. இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை. கஸ்தூரி திலகம் மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல ராமானுஜர் காலத்துக்கு முந்தைய சங்கு, சக்கரம் முறையே இங்கு நடைமுறையில் உள்ளது.

    சுவாதி நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமம் செய்து வழிபடுவது அதிக பலன்களைத் தரும். தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோம மும் இத்தலத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது.

    ஹிரண்யகசிபு வதம் முடிந்ததும் நரசிம்மர், முதன் முதலாக பூவரசன் குப்பத்தில்தான் தாயாருடன் காட்சிக் கொடுத்தார். எனவே இத்தலம் “தென் அகோபிலம்” என்று புகழப்படுகிறது.

    அகோபிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரும், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரும் அளவு, உயரம், அகலம், அழகு, வடிவமைப்பு உள்பட அனைத்து அம்சங்களிலும் ஒரேமாதிரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தலத்தில் நரசிம்மரிடம் நாம் நம்மை ஒப்படைத்து விட்டால் ரூணம் (கடன்) ரோகம் (நோய்) சத்ரு (எதிரி) ஆகிய மூன்று தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    சுவாதி நட்சத்திரத்தினத்தன்று இத்தலத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமஞ்சனம், 9 மணிக்கு ஹோமப் பூஜைகள் 12 மணிக்கு பூர்ணாஹுதியும், மதியம் 1 மணிக்கு கலசதீர்த்தமும் நடைபெறும்.

    2004-ம் ஆண்டு இத்தலத்தில் திருப்பணி செய்யும்போது ஆண்டாள் சன்னதி அருகே தோண்டியதில் அபூர்வமான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெரு மாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 12 நவராத்திரி நாட்களில் இத்தலத்தில் நடக்கும் ஹோம பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 டன் பழ வகைகள், சுமார் ஆயிரம் லிட்டர் நெய், தேன் அந்த யாகத்தில் பயன்படுத்தப்படும்.

    தேர்தலில் போட்டியிடுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்வது நடை முறையில் உள்ளது.

    முப்பதாறு சுவாதி நாட்களில் விரதமிருந்து இங்கு வழிபட்டால் நினைத்தது நடக்கும். விரதமிருந்து சனி, புதன்கிழமைகளில் இத்தலத்தில் வழிபடுவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகிறார்கள்.
    ×